Pages

Monday, September 15, 2014

கத்தி திரைப்படம் வெளியிடும் தேதி அறிவிப்பு - Vijay Kaththi movie release date

Kaththi movie many problems of release date - கத்தி  திரைப்படம்வெளியிடும்  தேதி பல பிரச்சனைகளுக்குப் பின்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ .ஆர் .முருகதாஸ் இயக்கத்தில் விஜய் மற்றும் சமந்தா நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே முடிவுற்ற நிலையில் ரசிகர்கள் பெரும் ஆவலோடு எதிர்பார்த்துக்கொண்டிருந்தனர் . இந்நிலையில் "கத்தி " படத்தின் தயாரிப்பாளரான சுபாஸ்கரன் அல்லிராஜா இலங்கை அதிபர் ராஜ பக்சேவின் தொழில் கூட்டாளி என்பதால் தமிழ்நாட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது.

அவர் சார்பாக "ஐயங்கரன்" கருணாமூர்த்தி உட்பட பலபேர் கருத்து தெரிவித்தும் எதிர்ப்பாளர்கள் கேட்பதாக தெரியவில்லை. இதனை குறித்து அல்லிராஜா கூறுகையில்:

நான் சினிமாவிற்கு புதிதாக கிளம்பி வரவில்லை. ஏற்கெனவே தமிழில் "பிரிவோம் சந்திப்போம்" என்ற படத்தினை தயாரித்திருக்கிறேன். அந்த படத்தை யாரும் எதிர்க்கவில்லை. ஹீரோ விஜய் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் ஆகிய இருவரும் பிரபலமானவர்கள் என்பதால் "கத்தி" படத்தினை எதிர்க்கிறார்கள் என நினைக்கிறேன். மேலும் சூர்யாவை வைத்தோ சீமானை வைத்தோ எந்த படமும் தயாரிக்கவில்லை. அப்படி எந்த திட்டமும் இல்லை.

இவ்வாறு சுபாஸ்கரன் அல்லிராஜா தெரிவித்துள்ளார்.

Tags: Kaththi movie problems, Kaththi produced problem, Kaththi released problems

No comments:

Post a Comment